கஞ்சா, மெத் ஆம்பெட்டமைன் கடத்திய நான்கு பேருக்கு ‘காப்பு’
கஞ்சா, மெத் ஆம்பெட்டமைன் கடத்திய நான்கு பேருக்கு ‘காப்பு’
ADDED : நவ 16, 2026 08:35 PM

ஊத்துக்கோட்டை: கஞ்சா, மெத் ஆம்பெட்டமைன் மாத்திரைகள் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரியபாளையம் – ஆவடி நெடுஞ்சாலையில், அணைக்கட்டு பகுதி வழியே கஞ்சா, போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, வெங்கல் போலீசார் இன்று (நவ.,16) அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மற்றும் காரை மடக்கி சோதனை செய்தனர்.
அதில், 3 கிலோ கஞ்சா, 15 கிராம் மெத் ஆம்பெட்டமைன் மாத்திரைகள் இருந்தன. இது தொடர்பாக, கார், இருசக்கர வாகனத்தில் வந்த பெங்களூரைச் சேர்ந்த அஜய், 26, மனோஜ், 28, ஹரிஷ், 21, கார்த்திக், 27, ஆகிய நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். கார், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், போளிவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே, 1 கிலோ கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த, பாக்குபேட்டை இளவரசன், 34, மற்றும் பாலவாக்கம் ஆதித்யா, 24, இருவரையும், மணவாள நகர் போலீசார் கைது செய்தனர்.
