/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆட்டோ - கார் மோதல் நான்குபேர் காயம்
/
ஆட்டோ - கார் மோதல் நான்குபேர் காயம்
ADDED : நவ 12, 2024 07:43 PM
திருவளளூர்:திருவள்ளூர் அடுத்த கம்மவார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அமித், 47. ேஷர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் மணவாளநகரில் இருந்து ஸ்ரீபெருமபுதுார் நோக்கி பயணியரை ஏற்றி சென்றார்.
மேல்நல்லாத்துார் பகுதியில் சாலையோரம் ஆட்டோவை நிறுத்தி பயணியரை ஏற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து மணவாளநகர் நோக்கி வந்த மகேந்திரா சைலோ கார் ேஷர் ஆட்டோ மீது விபத்துக்குள்ளானது.
இதில் அமித், 47 மற்றும் மேல்நல்லாத்துாரைச் சேர்ந்த பிரிஸ்சில்லா, 31, ஷபீனா, 34, ராஜாநந்தினி, 32 ஆகிய நால்வர் படுகாயமடைந்தனர். அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவககல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.