/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டை - பெரிஞ்சேரிக்கு ரூ.20 கோடியில் நான்கு வழிச்சாலை
/
ஊத்துக்கோட்டை - பெரிஞ்சேரிக்கு ரூ.20 கோடியில் நான்கு வழிச்சாலை
ஊத்துக்கோட்டை - பெரிஞ்சேரிக்கு ரூ.20 கோடியில் நான்கு வழிச்சாலை
ஊத்துக்கோட்டை - பெரிஞ்சேரிக்கு ரூ.20 கோடியில் நான்கு வழிச்சாலை
ADDED : நவ 19, 2024 08:29 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், போந்தவாக்கம், கச்சூர், பெரிஞ்சேரி, சீத்தஞ்சேரி, தேவந்தவாக்கம், ஒதப்பை, பூண்டி, சதுரங்கப்பேட்டை, ஒதப்பை, புல்லரம்பாக்கம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
திருவள்ளூரில் இருந்து சத்தியவேடு, வரதயபாளையம், தடா, சூளூர்பேட்டை, காளஹஸ்தி மற்றும் நாகலாபுரம், பிச்சாட்டூர், புத்துார் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு, இச்சாலை வழியாக ஊத்துக்கோட்டை சென்று அங்கிருந்து செல்ல வேண்டும்.
ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள், திருவள்ளூர் செல்ல இச்சாலை வழியே பயணிக்க வேண்டும். ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலை இருவழிச்சாலையாக உள்ளது. இந்த வழியாக தினமும், 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற அரசு முடிவெடுத்து, முதற்கட்டமாக பெரிஞ்சேரி - ஊத்துக்கோட்டை இடையே, 2.6 கி.மீட்டர் துாரம் சாலை அமைக்க, 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, இந்த சாலையில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. 30 மீட்டர் அகலத்தில் மீடியனுடன் சாலை அமைக்க, விரைவில் 'டெண்டர்' விடப்பட்டு பணிகள் துவங்கும் என, திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.