/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிதி நிறுவனத்தில் மோசடி…: 'மாஜி' மேனேஜருக்கு வலை
/
நிதி நிறுவனத்தில் மோசடி…: 'மாஜி' மேனேஜருக்கு வலை
ADDED : டிச 26, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி :   திருத்தணி பகுதியில் எல் அண்ட் டி தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் முன்னாள் மேலாளராக திலீப், 37, என்பவர், நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர்களிடம் போலி ரசீது கொடுத்து, மொத்தம் 3.50 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இதை, தற்போதைய மேலாளர் மரேஷ், 32, என்பவர், கண்டுபிடித்து, திருத்தணி போலீசில், திலீப் மீது புகார் கொடுத்தார். அதன்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து திலீப்பை தேடி வருகின்றனர்.

