ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
UPDATED : ஜூன் 02, 2026 03:57 PM
ADDED : ஜூன் 02, 2026 03:41 PM
திருவள்ளூர்:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது என, திருவள்ளூர் கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கலெக்டர் கவிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
'தாட்கோ' வாயிலாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு, தனியார் நிறுவனத்துடன் இணைந்து, கம்ப்யூட்டர் எய்டேட் டிசைன், கம்ப்யூட்டர் எய்டேட் மேனுபாக்சரிங்க, இன்ட்ஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த, பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மின் மற்றும் மின்னணுவியல் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றவர்கள், இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பு 18 - 35. குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கான கால அளவு, 90 நாட்கள். மேலும், பெரம்பலுார் மற்றும் சேலம் மாவட்டங்களில், பயிற்சி நடைபெற உள்ளது. தகுதி பெறும் நபர்கள், பயிற்சி நடைபெறும் மாவட்டங்களில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை, 'தாட்கோ'வால் ஏற்கப்படும்.
இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்கள், பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக, வேலை வாய்ப்பும் வழங்கப்படும். தகுதி, விருப்பம் உள்ளோர், www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
