/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு இலவச 'எம்ப்ராய்டரி' பயிற்சி
/
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு இலவச 'எம்ப்ராய்டரி' பயிற்சி
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு இலவச 'எம்ப்ராய்டரி' பயிற்சி
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு இலவச 'எம்ப்ராய்டரி' பயிற்சி
ADDED : ஏப் 09, 2025 10:35 PM
திருவள்ளூர்:'தாட்கோ' வாயிலாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச 'எம்ப்ராய்டரி' பயிற்சி வழங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, சென்னை, வேளச்சேரியில் உள்ள 'விவேஷியஸ் அகடாமி மற்றும் தாட்கோ' இணைந்து, 'டிப்ளமா ஆரி எம்பிராய்டரி' மற்றும் ஜவுளியில் கையால் அச்சியிடுவதற்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கல்வி தகுதி, 10, பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் 18 - 30 வயது வரை உள்ளோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலம் 30 நாட்கள். இப்பயிற்சியை பெற www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, பயிற்சி உபகரணம் மற்றும் உணவு உள்ளிட்ட செலவினம் தாட்கோ வாயிலாக வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.