ADDED : அக் 12, 2025 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி தளபதி கே.விநாயகம் மேல்நிலைப் பள்ளியில், திருத்தணி ரோட்டரி சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பம்மல் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில், நேற்று இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.
இதில், பம்மல் சங்கரா கண் மருத்துவமனையின் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் பங்கேற்று ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண்புரை, கண்ணீர் வடிதல் போன்றவைக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். மொத்தம், 125 பேர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.
இதில், 45 பேர் கண் அறுவை சிகிச்சை செய்வதற்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்களை மருத்துவமனை வாகனத்திலேயே அழைத்து சென்றனர்.