/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிவன் கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு
/
சிவன் கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு
ADDED : அக் 12, 2025 10:16 PM
புழல்:அம்பத்துாரைச் அடுத்த புழல், காவாங்கரை, சக்திவேல் நகரில், சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிவன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, கருவறையின் வெளியே உள்ள உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அவர்கள் புழல் போலீசில் புகார் அளித்தனர். கோவில் உண்டியல் ஒவ்வொரு ஆண்டும் திறக்கப்பட்டு, அதிலுள்ள காணிக்கைகள் எண்ணப்படும் எனவும், ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை லட்சத்திற்கும் குறையாமல் காணிக்கை இருந்ததாகவும், கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதேபோல இந்தாண்டும் உண்டியலில் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கும் மேல் காணிக்கை தொகை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.