/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக் திருட முயன்ற இருவர் சிக்கினர்
/
பைக் திருட முயன்ற இருவர் சிக்கினர்
ADDED : அக் 12, 2025 10:15 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் பைக் திருட முயன்ற இருவரை, அப்பகுதி மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
கும்மிடிப்பூண்டி சாய்பாபா நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 28. நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில், ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, 'ஹோண்டா யூனிக்கான்' பைக்கை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார்.
கடைக்கு சென்று திரும்பிய போது, அவரது பைக்கின் பூட்டை உடைத்து, இருவர் திருட முயன்றனர். அவர் கூச்சலிட்டதால், அங்கிருந்த மக்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து, கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல ரவி தேஜா, 21, பனாலா பிரசங்கி, 46, என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், இவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.