/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாய் கடியால் விவசாயி பலி ஆர்.கே.பேட்டையில் சோகம்
/
நாய் கடியால் விவசாயி பலி ஆர்.கே.பேட்டையில் சோகம்
ADDED : அக் 12, 2025 10:15 PM
ஆர்.கே.பேட்டை:நாய் கடித்த பின் முறையாக சிகிச்சை மேற்கொள்ளாததால், ஒரு மாதத்திற்கு பின் விவசாயி உயிரிழந்தார்.
ஆர்.கே.பேட்டை அடுத்த கே.பி.என்.கண்டிகையைச் சேர்ந்தவர் முருகன், 45. இவரது வீட்டருகே உள்ள நாய், கடந்த மாதம் 9ம் தேதி கடித்தது. அதன்பின், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
தொடர்ந்து நான்கு முறை தடுப்பூசி போட வேண்டும். ஆனால் இவர், எந்தவித பாதிப்பும் இல்லாததால், இரண்டு தடுப்பூசிகளுடன் நிறுத்தினார். இவருக்கு, நேற்று முன்தினம் திடீரென உடல்நலம் பாதித்தது.
உடனே, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கடந்த மாதம் நாய் கடித்ததால் தான் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் உடல்நல பாதிப்பால் இறந்தாரா என்பது, பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.