தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 9,425 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

 9,425 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

 9,425 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி


ADDED : பிப் 11, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 102 தனியார் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, 9,425 மடிக்கணினி வழங்கப்பட்டது.

திருவள்ளூர் தனியார் திருமண மண்டபத்தில், 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தில், இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், 102 தனியார் கல்லுாரிகளைச் சேர்ந்த, 9,425 மாணவ - மாணவியருக்கு மடிக்கணினி வழங்கினார்.

பின், அவர் பேசியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில், முதற்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு 4,308 மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. மேலும், இறுதியாண்டிற்கு முந்தைய, 4,231 மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, 102 தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும், 9,425 பேருக்கு, மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களின் எண்ணிக்கை 8,539. தனியார் கல்வி நிறுவனம் மாணவர்களின் எண்ணிக்கை 18,337. திருவள்ளூர் மாவட்டத்தில், மொத்தம் 26,876 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us