/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துப்புரவு பணியாளருக்கு இலவச மருத்துவ முகாம்
/
துப்புரவு பணியாளருக்கு இலவச மருத்துவ முகாம்
ADDED : செப் 28, 2024 07:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு, இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. சுகாதார அலுவலர் மோகன் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் உதயமலர் பாண்டியன், கமிஷனர் திருநாவுக்கரசு முகாமினை துவக்கி வைத்தனர்.
இதில், திருவள்ளூர் நகராட்சியில் பணிபுரியும், துப்புரவு பணியாளர் 250 பேருக்கு, சர்க்கரை, ரத்த அழுத்தம், பொது மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இதில், சுகாதார மேற்பார்வையாளர்கள் கண்ணன், தட்சிணாமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.