/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் அடிக்கடி ரயில் விபத்து பயணியர் மத்தியில் கடும் அச்சம் பயணியர் மத்தியில் கடும் அச்சம்
/
திருவள்ளூரில் அடிக்கடி ரயில் விபத்து பயணியர் மத்தியில் கடும் அச்சம் பயணியர் மத்தியில் கடும் அச்சம்
திருவள்ளூரில் அடிக்கடி ரயில் விபத்து பயணியர் மத்தியில் கடும் அச்சம் பயணியர் மத்தியில் கடும் அச்சம்
திருவள்ளூரில் அடிக்கடி ரயில் விபத்து பயணியர் மத்தியில் கடும் அச்சம் பயணியர் மத்தியில் கடும் அச்சம்
ADDED : ஜூலை 14, 2025 11:35 PM
சென்னை,திருவள்ளூர் மாவட்டம், வரதராஜபுரம் அடுத்த இருளர் காலனி அருகில், நேற்று முன்தினம் சரக்கு ரயில் தீப்பற்றி எரிந்தது.
சென்னை துறைமுகத்தில் இருந்து வாலாஜா சாலை ரயில் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற 50 டேங்கர்களில் 18 டேங்கர்கள் எரிந்ததில், 12 கோடி ரூபாய் மதிப்பிலான பல லட்சம் லிட்டர் டீசல் வீணானது.
இந்த விபத்து மட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளாகவே, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ரயில் பாதை பகுதிகளில் அடிக்கடி விபத்து, அசம்பாவிதம் நடப்பது பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, பயணியர் கூறியதாவது:
ரயில்கள் தடம்புரளுவது, தீப்பற்றி எரிவது உள்ளிட்ட சம்பவங்கள், ரயில் பயணியரின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்வது ரயில்வேயின் முக்கிய பணி.
ஆனால் அவர்கள், ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால், பயணியருக்கு உடனடியாக தகவல் அளிக்கும் வகையில், ரயில் நிலையங்களில் அவசர கால உதவியை செய்வதில்லை. இதனால் விபத்து நடந்தது தெரியாமல், பல மணி நேரம் ஒரே நிலையத்தில் காத்திருக்கும் அவதி ஏற்படுகிறது.
தவிர, ரயில் பாதுகாப்பு பணியாளர்கள், ரயில்வே பாதுகாப்பு போலீசார் ரோந்து பணியில் இருந்தாலும், திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ரயில் பாதைகளில்தான் அடிக்கடி அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அதை தடுப்பதற்கான பணிகளை, ரயில்வே நிர்வாகம் முடுக்கிவிட வேண்டும்.
குறிப்பாக, தெற்கு ரயில்வேயின் தகவல் மையத்தை, விபத்து காலங்களில் தடையின்றி தொடர்பு கொள்ள, கூடுதல் இலவச எண்களை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சதிவேலையா?
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னைக்கு வரும் இரண்டு பிரதான ரயில் பாதைகள், திருவள்ளூர் மாவட்டத்தில் தான் அமைந்துள்ளன. முக்கிய ரயில் சந்திப்புகள், துறைமுகம், புறநகர் மின்சார நிலையங்கள் இருப்பதால், ரயில்களின் இயக்கம் அதிகமாக இருக்கிறது.
இதனால் சில நேரங்களில், விபத்துகள் நடந்து விடுகின்றன. இதுபோன்ற விபத்துகளை தவிர்த்து, ரயில்களை சீராக இயக்க, தெற்கு ரயில்வே தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், திருவள்ளூர் அருகில் நடந்த சரக்கு ரயிலில் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளும்போது, ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கும் அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.