ADDED : பிப் 21, 2026 05:20 AM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணி அடுத்த தெக்களூரைச் சேர்ந்த பாலாஜி, 24, என்பவரை, முன்விரோதம் காரணமாக கடந்த மாதம் அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், 26, என்பவர் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து பாலாஜி அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். நேற்று, தலைமறைவாக இருந்த அஜித்குமாரை கைது செய்தனர்.
