/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கல்லுாரி மாணவர்களின் போதை விழிப்புணர்வு பேரணி
/
கல்லுாரி மாணவர்களின் போதை விழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 09, 2025 12:32 AM

திருத்தணி:திருத்தணி ஜி.ஆர்.டி., கல்வியியல் கல்லூரியில், நாட்டு நலப் பணி திட்ட முகாம், கடந்த 6ம் தேதி முதல், இம்மாதம் 12ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், போதை விழிப்புணர்வு பேரணி நேற்று திருத்தணி ரயில் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்வியியல் கல்லுாரி முதல்வர் ராதிகா வித்யாசாகர் தலைமை வகித்தார்.
நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கட் ரத்தினம் வரவேற்றார். கல்விக் குழுமத்தின் துணை தலைவர் லட்சுமி நரசிம்மன் முன்னிலை வகித்தார்.
இதில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை நாட்டு நலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நாகசுப்பிரமணி, பல்கலை நாட்டு நல பணி திட்ட அலுவலர் பேராசிரியர் ஷர்மிளா, கல்வி குழுமத்தின் டீன் ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தனர்.
இதில், 300 மாணவர்கள் பங்கேற்று, போதை விழிப்புணர்வு குறித்து விளம்பர பதாகைகள் கைகளில் ஏந்தியும், போதைக்கு எதிரான வாசகங்கள் குறித்து கோஷமிட்டவாறு ரயில் நிலையத்தில் இருந்து, ம.பொ.சி., சாலை, அரக்கோணம் சாலை, சன்னிதி தெரு, அக்கைய்யநாயுடு உட்பட முக்கிய தெருக்கள் வழியாக. நகராட்சி அலுவலகம் வரை பேரணி நடந்தது. அதை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

