/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 21, 2025 01:54 AM

ஊத்துக்கோட்டை:விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 27ம் தேதி நாடு முழுதும் நடைபெற உள்ளது.
ஊத்துக்கோட்டையில் போலீசாருக்கும், விநாயகர் சதுர்த்தி விழா அமைப்பாளர்களுக்கும் இடையே ஆலோசனை கூட்டம், காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையில் நடந்தது.
இதில், ஊத்துக்கோட்டை, பென்னலுார்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் இருந்து, விநாயகர் சிலை அமைப்பாளர்கள், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், 10 அடிக்கு மேல் சிலைகள் வைக்க கூடாது. விநாயகர் சிலைகள் கரைப்பது குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
தீப்பிடிக்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும். 'பிளாஸ்டர் ஆப் பாரிசில்' சிலை தயாரிக்க கூடாது. சிலை அருகே பாதுகாப்பிற்கு ஆட்கள் இருக்க வேண்டும் என, அறிவுரைகள் வழங்கப்பட்டன.
ஆர்.கே.பேட்டை ஆர்.கே.பேட்டை மற்றும் பொதட்டூர்பேட்டை காவல் நிலையங்களில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. போலீசார் நடத்திய இக்கூட்டத்தில், பொதட்டூர்பேட்டை, ஆர்.கே.பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பகுதி மக்கள் பங்கேற்றனர்.
இதில், சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இடம், ஒலிபெருக்கியின் தன்மை, மின்சார அனுமதி, ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டிய நேர கட்டுப்பாடு உள்ளிட்டவை விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டன.