/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடாரண்யேஸ்வரர் கோவில் திருக்குளத்தில் கங்கை பூஜை
/
வடாரண்யேஸ்வரர் கோவில் திருக்குளத்தில் கங்கை பூஜை
ADDED : டிச 19, 2024 12:28 AM

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காட்டில் அமைந்துள்ளது. இக்கோவில் திருக்குளம் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பருவமழை காரணமாக நீர் முழுதும் நிரம்பிய நிலையில் கோவிலின் ஐதீக முறைப்படி கங்கை பூஜை நேற்று செய்யப்பட்டது.
நேற்று, காலை 9:00 மணிக்கு பூஜை ஆரம்பமானது. இதில், பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர், விபூதி கொண்டு சுவர்ண அபிஷேகம் செய்யப்பட்டது.
பின், தாம்பூலத்தட்டில் புடவை வெற்றிலை பாக்கு, பழம், பூ வைத்து திருக்குளத்தில் விடப்பட்டு பூஜை நிறைவு பெற்றது. இந்த காட்சியை காண்போருக்கு கங்கைக்கு சென்று வந்த புண்ணியம் உண்டு என்பது ஐதீகம்.

