/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவருக்கு கத்திக்குத்து கொடுங்கையூர் ரவுடி கைது
/
மாணவருக்கு கத்திக்குத்து கொடுங்கையூர் ரவுடி கைது
ADDED : செப் 28, 2025 11:32 PM
கொடுங்கையூர்:இன்ஜினியரிங் கல்லுாரி மாணவரை கத்தியால் குத்திய ரவுடியை, போலீசார் கைது செய்தனர்.
கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் வினித், 21; இன்ஜினியரிங் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவர்.
இவர், கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகர், ஜவஹர் தெருவில் உள்ள கடையில், நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட் பிடிப்பது வழக்கம்.
நேற்று, வினித் தனியாக சிகரெட் பிடித்து கொண்டிருந்தபோது, கடைக்கு போதையில் வந்த மர்ம நபர், கடைக்காரரிடம் பொருள் ஒன்றை கேட்க, அவர் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதில் கடைக்காரருக்கும், போதை ஆசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரையும் விலக்கி விட, வினித் முயன்றுள்ளார். ஆத்திரமடைந்த போதை ஆசாமி மறைத்து வைத்திருந்த கத்தியால், வினித்தை வயிற்றில் குத்தி தப்பினார்.படுகாயமடைந்த வினித், அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்த சரத்குமார் என்கிற 'கோழி' சரத், கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.