ADDED : அக் 21, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:கொடுங்கையூரைச் சேர்ந்த இம்ரான், 35, என்பவர், கஞ்சா வழக்கில் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
நேற்று முன்தினம், சிறை போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்ட போது, இம்ரான் ஆடையில், 20 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
சிறை போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். புகாரின்படி, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேபோல், தாம்பரம் அருகே கேம்ப் ரோடில், சேலையூர் போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியே வந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை சோதனை செய்தனர்.
அதில், 1 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஸ்கூட்டரில் வந்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்த அருண்,28, என்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.