ADDED : ஏப் 23, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, வாலிபர் ஒருவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரின் உடமைகளை சோதனை செய்தனர்.
அவரிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து சர்க்கார் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. அவர், ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த கோனேட்டி சாய்ராம், 22, என தெரியவந்தது. கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.