ADDED : ஜூலை 04, 2026 03:57 AM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடியில், திருத்தணி போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து, திருத்தணி நோக்கி நடந்து வந்த வாலிபர் ஒருவரை, சந்தேகத்தின்படி போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அந்த சோதனையில், வாலிபர், 200 கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில், கஞ்சா கடத்தி வந்தவர், திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஷியாம்சுந்தர், 26, என தெரிய வந்தது.
தொடர்ந்து, போலீசார் ஷியாம்சுந்தரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
