ADDED : ஜன 12, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, ஆந்திர மாநிலத்தில் இருந்து, திருத்தணி வழியாக, தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச்சாவடியில், ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார், வாகனங்களை சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவில், போலீசார் திருப்பதியில் இருந்து, திருத்தணி வழியாக, மதுரை செல்லும் அரசு விரைவு பேருந்தில் சோதனை நடத்தினர். அதில், பயணி ஒருவர், பையில், 6 கிலோ கஞ்சா கடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கஞ்சா கடத்தி வந்தவர், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, உப்புதுறை கிராமத்தைச் சேர்ந்த குமார், 35 என, தெரிய வந்தது. இதையடுத்து, திருத்தணி போலீசார் குமாரை கைது செய்தனர்.