/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொதட்டூர்பேட்டை ஏரியில் கொட்டப்படும் குப்பையால் நீர் மாசடையும் அபாயம்

ADDED : பிப் 16, 2025 03:18 AM

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், 30,000 பேர் வசித்து வருகின்றனர். நகரின் தென்மேற்கில் அமைந்துள்ள பொதட்டூர்பேட்டை ஏரி, பேரூராட்சியின் நீர்வளத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது.
கடந்த, 10 ஆண்டுகளாக இந்த ஏரி தண்ணீர் நிரம்பியே காணப்படுகிறது. ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட நீர்பிடிப்பு பகுதியில் இருந்து, அத்திமாஞ்சேரிபேட்டை, வடகுப்பம் பகுதி வழியாக நீர்வரத்து இருந்து வருகிறது.
இந்த ஏரியில், படகு வாயிலாக மீன்பிடிக்கும் அளவிற்கு நீர்பரப்பு பரந்து விரிந்துள்ளது. சிறப்பான நீர்நிலையாக விளங்கும் இந்த ஏரியில் சமீபகாலமாக அதே பகுதியைச் சேர்ந்த சிலர், சரக்கு வாகனங்களில் குப்பையை ஏற்றி வந்து கொட்டி விட்டு செல்கின்றனர்.
இதனால், நீர் மாசு ஏற்பட்டு வருகிறது. ஏரியில் வளரும் மீன் உள்ளிட்ட உயிரினங்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. ஏரியில் குப்பை கொட்டுபவர்களை, பேரூராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.