/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீர்வரத்து கால்வாயில் கொட்டப்படும் குப்பை
/
நீர்வரத்து கால்வாயில் கொட்டப்படும் குப்பை
ADDED : ஜன 11, 2025 11:46 PM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வீரமங்கலம் கிராமத்தின் தெற்கு பகுதியில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட நீர்பிடிப்பு பகுதியில் இருந்து நீர்வரத்து உள்ளது. நேசனுார் ஓடை வழியாக தமிழக எல்லைக்குள் நுழையும் இந்த நீர், வீரமங்கலம் ஏரிக்கும் அதை தாண்டி அஸ்வரேவந்தாபுரம் ஏரி, சோளிங்கர் ஏரி என, பல்வேறு ஏரிகளை நிரப்பிய பின், ஞானகொல்லிதோப்பு ஓடையை கடந்து நந்தி ஆறாக உருவெடுக்கிறது.
இந்த ஏரிகளின் நீராதாரத்தை நம்பி, 20,000 ஏக்கர் விவசாய நிலம், பாசன வசதி பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வீரமங்கலம் ஏரியின் நீர்வரத்து கால்வாயில், மரிக்குப்பம் சாலையை ஒட்டி குப்பை கொட்டி எரிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஏரிக்கு வரும் நீர், மாசடைகிறது. நிலத்தடி நீரும் மாசு அடையும். குடிநீர் தரம் குறையும் என, பகுதிவாசிகள் அச்சப்படுகின்றனர்.
நீர்வரத்து கால்வாயில் குப்பை கொட்டி எரிப்பதை தடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

