/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் கொட்டப்படும் குப்பையால் துர்நாற்றம் தண்டலம் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

ADDED : ஜன 17, 2025 01:24 AM

ஊத்துக்கோட்டை:சென்னை - பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தண்டலம் கிராமம். இங்கு, 3,000க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலை.
மேற்கண்ட நெடுஞ்சாலையில் உள்ள இவ்வூர் வழியே, பாலவாக்கம், ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், நகரி, புத்துார், திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் செல்கின்றன.
போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில், தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இதில், தண்டலம் கிராமத்தில் சுடுகாட்டை ஒட்டிய பகுதியில் பகுதிவாசிகள், ஊராட்சி நிர்வாகம் ஆகியவை குப்பையை கொட்டுகின்றன.
இதில் இருந்து காகிதம், குப்பை பறந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், குப்பையால் துர்நாற்றம் வீசி, நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தண்டலம் கிராமத்தில் சாலையோரம் குப்பை போடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.