/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோளிங்கர் ஏரி கால்வாய் கரையில் குவியும் குப்பை
/
சோளிங்கர் ஏரி கால்வாய் கரையில் குவியும் குப்பை
ADDED : பிப் 03, 2024 11:32 PM

சோளிங்கர்: சோளிங்கர் ஏரியின் உபரிநீர் கால்வாய், திருத்தணி சாலையின் குறுக்கே பாய்கிறது.
இதற்காக, இந்த பகுதியில் சாலையின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேம்பாலத்தை ஒட்டி, சோளிங்கர் நகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது.
குப்பை கிடங்கையும் தாண்டி, ஏரியின் உபரிநீர் கால்வாயின் கரையில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால், இந்த கால்வாய் வழியாக பாயும் உபரிநீர், மாசடைந்து வருகிறது. அதே நேரத்தில், இந்த கால்வாயில், நகரின் கழிவுநீர் கால்வாயும் இணைகிறது.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக, இந்த குப்பை கிடங்கு தீயில் புகைந்து வருகிறது. திருத்தணி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், புகையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, எரியும் குப்பையை அணைக்கவும், திடக்கழிவை முறையாக அகற்றவும் வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.