/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடில் குப்பை சுகாதாரம் கேள்விக்குறி
/
திருவாலங்காடில் குப்பை சுகாதாரம் கேள்விக்குறி
ADDED : செப் 24, 2024 06:57 AM

திருவாலங்காடு: திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட நகரில் 5,000த்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள் திருமண மண்டபங்கள் உள்ளன.
மேற்கண்ட பகுதியில் சேகரமாகும் குப்பையை கொட்டுவதற்கு, அந்தந்த தெருக்களில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இங்கு சேகரமாகும் குப்பையை, திருவாலங்காடு ஊராட்சி நிர்வாகம் சரிவர அகற்றுவதில்லை.
இதனால் முக்கிய வீதிகளில் குப்பைதொட்டி நிரம்பி,குப்பை ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக, பகுதிவாசிகள் புலம்புகின்றனர்.
குப்பையை அகற்றி சீரமைக்க திருவாலங்காடு பி.டி.ஓ., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

