/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும்: ஆணையர்
/
குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும்: ஆணையர்
ADDED : ஜூலை 08, 2025 09:26 PM
திருத்தணி:நகராட்சியில், வீடு, வீடாக குப்பை சேகரிக்க வரும் துப்புரவு ஊழியர்களிடம், குப்பையை தரம் பிரித்து தரவேண்டும் என, ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில் 350க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. வீடுகளில் சேரும் குப்பையை சேகரிப்பதற்காக, 110 ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் சிலர், துப்புரவு ஊழியர்களிடம் குப்பையை வழங்காமல், சாலையோரங்களில் கொட்டுகின்றனர்.
அந்த குப்பையை, மறுநாள் காலை துப்புரவு ஊழியர்கள் அள்ளும் போது துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
மட்கும் குப்பை, மட்கா குப்பை என, தரம்பிரித்து துப்புரவு ஊழியர்களிடம் கொடுக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில், குப்பையை வாங்காமல் அபராதம் விதிக்கப்படும். இனி வரும் காலங்களில் சாலை மற்றும் தெருக்களில் குப்பை கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.
மேலும், வேன் மற்றும் ஆட்டோ மூலம் குப்பையை தரம்பிரித்து வழங்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, நகராட்சி மக்கள் குப்பையை சேகரிக்க வரும் துப்புரவு ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

