/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வலை போட்டு மூடாமல் செல்லும் குப்பை வண்டி
/
வலை போட்டு மூடாமல் செல்லும் குப்பை வண்டி
ADDED : ஜன 01, 2025 12:29 AM

திருமழிசை, திருமழிசை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 150க்கும் மேற்பட்ட தெருக்களில், 6,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 25,000க்கும்மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் மற்றும் நெடுஞ்சாலையோரம் சேகரமாகும் குப்பையை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் வாகனங்களில் எடுத்து செல்கின்றனர்.
இவ்வாறு கொண்டு செல்லப்படும் குப்பை, காற்றில் பறந்து சாலையில் செல்வோர் மீது சிதறி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள், குப்பை கொண்டு செல்லும் வாகனங்களை, வலை போட்டு மூடி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.