/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொளவேடு அரசு பள்ளியில் காஸ் சிலிண்டர் திருட்டு
/
தொளவேடு அரசு பள்ளியில் காஸ் சிலிண்டர் திருட்டு
ADDED : அக் 07, 2025 11:47 PM
ஊத்துக்கோட்டை:அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளியில், காஸ் சிலிண்டர் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரியபாளையம் அடுத்த தொளவேடு கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் செயப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, சமையல் பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் காஸ் சிலிண்டர் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் காலை மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சமையலறை பூட்டப்பட்டது. நேற்று காலை பள்ளிக்கு சென்ற தலைமையாசிரியர் சித்திரைசெல்வம், சமையலறைக்கு சென்றார்.
அப்போது, அங்கிருந்த சிலிண்டர் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்படி, ஊத்துக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.