/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரியில் பேட்டரிகள் திருடிய மூவர் கைது
/
லாரியில் பேட்டரிகள் திருடிய மூவர் கைது
ADDED : அக் 07, 2025 11:49 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியில் பேட்டரிகளை திருடிய வழக்கில், மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 62. இவர், காக்களூர் ஆவின் பால் பண்ணை அருகே, கடந்த 29ம் தேதி இரவு லாரியை நிறுத்தி விட்டு, மறுநாள் காலை வந்து பார்த்தபோது, அதிலிருந்த 2 பேட்டரிகள் திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வந்தனர். இது தொடர்பாக, மணவாளநகர் தமிழரசன், 23, ஜெகதீஷ், 22, மற்றும் திருவள்ளூர் கார்த்திக், 24, ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.
பின், மூவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளை சிறையில் அடைத்தனர்.