/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜெனரேட்டர் அறை: எம்.எல்.ஏ.,
/
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜெனரேட்டர் அறை: எம்.எல்.ஏ.,
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜெனரேட்டர் அறை: எம்.எல்.ஏ.,
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜெனரேட்டர் அறை: எம்.எல்.ஏ.,
ADDED : மே 20, 2025 12:15 AM

திருத்தணி,திருத்தணி அடுத்த பீரகுப்பம் பகுதியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, இரு மருத்துவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தினமும், 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், பிரசவத்திற்கு கர்ப்பிணி பெண்கள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
நேற்று திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது, பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கலைவாணியிடம், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின், மருத்துவ அலுவலர் கலைவாணி, எம்.எல்.ஏ.,விடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜெனரேட்டர் அறை வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை வைத்ததார். உடனே எம்.எல்.ஏ., 'ஜெனரேட்டர் அறை விரைவில் ஏற்படுத்தி தரப்படும்' என உறுதியளித்தார்.