/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காட்டுப்பன்றி மீது மோதியதில் பெண் எஸ்.ஐ., படுகாயம்
/
காட்டுப்பன்றி மீது மோதியதில் பெண் எஸ்.ஐ., படுகாயம்
காட்டுப்பன்றி மீது மோதியதில் பெண் எஸ்.ஐ., படுகாயம்
காட்டுப்பன்றி மீது மோதியதில் பெண் எஸ்.ஐ., படுகாயம்
ADDED : ஜன 12, 2025 02:31 AM
திருத்தணி
திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை போலீஸ் நிலையத்தில், எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் சுகந்தி, 38; இவர், திருத்தணி டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர், தினமும் ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில், பொதட்டூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றார்.
இரவு, 11:00 மணிக்கு பணிகளை முடித்துக் கொண்டு பொதட்டூர்பேட்டையில் இருந்து திருத்தணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திருத்தணி ஒன்றியம், புச்சிரெட்டிப் பள்ளி அருகே வரும் போது திடீரென ஒரு காட்டுப்பன்றி சாலையின் குறுக்கே வந்தது. அப்போது, எஸ்.ஐ.,யின் இருசக்கர வாகனம் பன்றியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், எஸ்.ஐ., சுகந்தி சாலையில் விழுந்து முகம் மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்தவர்கள் படுகாயமடைந்த பெண் எஸ்.ஐ., யை மீட்டு, '108' அவசரகால ஆம்புலன்ஸ் வாயிலாக, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு முதலுதவி பெற்ற பின், திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.