/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுமி கர்ப்பம் 'காதல்' கணவர் கைது
/
சிறுமி கர்ப்பம் 'காதல்' கணவர் கைது
ADDED : நவ 11, 2025 09:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி காவல் மாவட்டத்தைச் சேர்ந்த மது, 24 என்பவர், ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதியில் வசித்து வரும் உறவினரான, 17 வயது சிறுமியை காதலித்தார். ஆறு மாதத்திற்கு முன் இருவீட்டார் சம்மதத்துடன், திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்தார்.
இந்நிலையில், நான்கு மாத கர்ப்பிணியான சிறுமியை, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது மருத்துவர், சிறுமியின் வயது 17 என்பதால், திருத்தணி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, மது மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

