ADDED : நவ 11, 2025 09:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ராகவநாயுடுகுப்பம் கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 'ஸ்மார்ட்' வகுப்பறையில் கணினி, லேப்டாப், மடிக்கணினி என, பல்வேறு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
நேற்று, இப்பள்ளியின் கதவை உடைக்க கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால், பூட்டை உடைக்க முடியாமல் தப்பிச் சென்றனர். நேற்று காலை பள்ளிக்கு வந்த தலைமையாசிரியை லட்சுமி, பள்ளியில் நடந்த கொள்ளை முயற்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அரசு பள்ளிகளில் இரவு காவலர்கள் பணியிடம் நிரப்பப்படாததால், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இதே நிலை தான் நீடிக்கிறது.

