/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் ‛பொன் இறால் 24' கருத்தரங்கு
/
பொன்னேரியில் ‛பொன் இறால் 24' கருத்தரங்கு
ADDED : டிச 13, 2024 09:33 PM
பொன்னேரி:பொன்னேரியில் இயங்கி வரும், டாக்டர் எம்ஜிஆர் அரசு மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்பது தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாகும்.
தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில், நேற்று, கல்லுாரி வளாகத்தில் தேசிய அளவிலான எட்டாவது ‛பொன் இறால் 24' கருத்தரங்கு நடந்தது.
‛இறால் ஏற்றுமதி சந்தைக்கும் உள்நாட்டு நுகர்வுக்கும் இடையே சமநிலையை உருவாக்குதல்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி முதல்வர் முனைவர் ஜெயஷகிலா தலைமையில் நடந்த கருத்தரங்கில், பல்கலை துணைவேந்தர் முனைவர் பெலிக்ஸ், வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் முனைவர் அழகுசுந்தரம், கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குனர் ஜெயபால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
மீனவர்கள், மீனவ பெண்கள், இறால் வளர்ப்போர், ஆராய்ச்சி மாணவர்கள் என, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கில், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு இறால் சந்தையில் உள்ள சவால்கள், இறால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான சந்தை விழிப்புணர்வு, உள்நாட்டு நுகர்வை ஊக்குவிப்பது, இறால் ஏற்றுமதி வாயிலாக ஏற்படும் பொருளாதார நன்மைகள் குறித்து, சிறப்பு அழைப்பாளர்கள் விளக்கி பேசினர்.