/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இலங்கை தமிழர் முகாமில் புனித வெள்ளி வழிபாடு
/
இலங்கை தமிழர் முகாமில் புனித வெள்ளி வழிபாடு
ADDED : ஏப் 19, 2025 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், துாய அன்னாள் தேவாலயம் அமைந்துள்ளது. புனித வெள்ளியை முன்னிட்டு, பங்கு தந்தை ஆரோக்ய வேளாங்கண்ணி ஸ்டாலின் தலைமையில், நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ஏசு கிறிஸ்து சிலுவையை சுமந்தபடி ஊர்வலமாக அழைத்து செல்லும் சிலுவை பாதை நிகழ்வுகளை, முகாமை சேர்ந்த சிறுவர், சிறுமியர் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். தொடர்ந்து தேவாலயத்தில், புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
புனித வெள்ளி நிகழ்வுகளில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.