ADDED : மார் 26, 2025 08:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று, 30 பயணியருடன் பொதட்டூர்பேட்டை நோக்கி நேற்று மாலை புறப்பட்டது. இந்த பேருந்து கிருஷ்ணசமுத்திரம் பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது, திடீரென பழுதாகி நின்றது.
இதனால், பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணியர் ஒரு மணி நேரம் காத்திருந்து, மாற்று பேருந்து வாயிலாக சென்றனர். இதனால், பயணியர் கடும் சிரமப்பட்டனர்.