UPDATED : செப் 01, 2026 10:36 PM
ADDED : செப் 01, 2026 10:03 PM

திருத்தணி:ஆற்காடு குப்பம் கிராமத்தில் அரசு பேருந்து கண்ணாடியை பள்ளி மாணவர்கள் கல் எறிந்து உடைத்தனர்.
திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து தடம் எண்: 105 அரசு பஸ் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் வரை இயக்கப்படுகிறது.
நேற்று மதியம் திருவள்ளூரில் இருந்து, 45 பயணியருடன் ஏற்றிக்கொண்டு திருத்தணி நோக்கி வந்தது.
ஆற்காடுகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே பேருந்து வந்தபோது, பள்ளி சீருடை அணிந்த இரண்டு மாணவர்கள் சாலையில் இருந்த கற்களை எடுத்து பேருந்து ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டு, பள்ளிக்குள் ஓடினர்.
இதில் பயணியர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
இதுகுறித்து ஓட்டுநர் மோகன் அளித்த புகாரின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசார், ஆற்காடு குப்பம் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
