ADDED : அக் 30, 2025 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை, டி.என்.21 என்.1492 பேருந்து மாணவர்கள், பயணியரை ஏற்றிக் கொண்டு பெரியபாளையம் வழியே ஏனம்பாக்கம் சென்றது.
பேருந்து நிலையம் வெளியே வரும் போது, திடீரென பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைக்கப்பட்ட சத்தம் கேட்டு மாணவர்கள், பயணியர் அலறினர்.
பேருந்தில் இருந்த மாணவர்கள் சிலர் தான் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

