/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு கல்லுாரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
அரசு கல்லுாரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 07, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் திருத்தணி அரசு கலைக் கல்லுாரி நுழைவு வாயிலில், தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில், பேராசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரவேண்டும் உட்பட, 25 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.