/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய அரசு ஊழியர்கள்
/
கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய அரசு ஊழியர்கள்
ADDED : அக் 16, 2025 09:45 PM
ஊத்துக்கோட்டை: பழைய ஓய்வூதிய திட்டம், பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.
தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் மணிகண்டன் கூறியதாவது:
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தது.
ஆனால், நான்கரை ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை அதுகுறித்த எவ்வித அறிவிப்பும் அறிவிக்கவில்லை.
இதை கண்டித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.