/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவர்கள் இடையே மோதல் ஆசிரியர்கள், பெற்றோர் கவலை
/
மாணவர்கள் இடையே மோதல் ஆசிரியர்கள், பெற்றோர் கவலை
ADDED : அக் 16, 2025 09:45 PM
திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடுகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். நேற்று மதியம் உணவு இடைவெளியின் போது, பிளஸ் 2 மாணவர்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, பிளஸ் 1 மாணவர்கள் தன்ராஜ் கண்டிகை கிராமத்தை சேர்ந்த இருவர், சமரசம் செய்ய முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமாபுரத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள், அவர்களை தாக்கினர்.
ஆசிரியர்கள் வந்தவுடன் மாணவர்கள் கலைந்து சென்றனர். பள்ளி முடிந்து வெளியே வந்த பிளஸ் 1 மாணவர்கள் இருவரை, லட்சுமாபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் ஆறு பேர் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து இரும்பு மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாணவர்கள் இருவரும் கனகம்மாசத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.