ADDED : டிச 04, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 18 - 27 வரை ஆட்சி மொழி சட்டவார விழா நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 18ம் தேதி முதல், 27ம் தேதி வரை, ஆட்சி மொழி சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளது.
இதில், கணினி தமிழ் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை அமைக்க வலியுறுத்தல், பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெற உள்ளது.
அரசு மற்றும் தனியார் ஊழியர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தமிழமைப்புகள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.