/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கை அறிமுக கூட்டம்
/
அரசு மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கை அறிமுக கூட்டம்
ADDED : மார் 15, 2025 06:52 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அரசு மாதிரி பள்ளிக்கு மாணவர் அறிமுக சேர்க்கை கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு, தமிழக மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன் பங்கேற்று பேசியதாவது:
மாதிரி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, தேசிய அளவிலான நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனர். எனவே, மாணவ - மாணவியரை தலைமையாசிரியர்களும், பெற்றோரும் மாதிரி பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் ரவிசந்திரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரேச்சல் பிரபாவதி, அரவிந்தன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.