/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெங்கடாபுரத்தில் பூட்டி கிடக்கும் சுகாதார வளாகத்தால் அரசு பணம் வீண்
/
வெங்கடாபுரத்தில் பூட்டி கிடக்கும் சுகாதார வளாகத்தால் அரசு பணம் வீண்
வெங்கடாபுரத்தில் பூட்டி கிடக்கும் சுகாதார வளாகத்தால் அரசு பணம் வீண்
வெங்கடாபுரத்தில் பூட்டி கிடக்கும் சுகாதார வளாகத்தால் அரசு பணம் வீண்
ADDED : டிச 11, 2024 01:33 AM

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், என்.என்.கண்டிகை ஊராட்சி, வெங்கடாபுரம் கிராமத்தில், 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியினரின் நலன் கருதி சில ஆண்டுகளுக்கு முன், பல லட்சம் ரூபாயில் மகளிர் சுகாதார வளாகம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
முறையாக பராமரிக்காததால், சுகாதார வளாகம் பழுதடைந்ததால், பெண்கள் பயன்படுத்த முடியாமல் பூட்டப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 2023 - 24ம் ஆண்டு, 15வது நிதி குழு மானியம் வாயிலாக, 4 லட்சம் ரூபாயில் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்தனர்.
ஆனால், மகளிர் சுகாதார வளாகம் நேற்று வரை, பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. சுகாதார வளாகத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து விஷ ஜந்துக்கள் கூடாரமாக மாறி வருகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் சீரமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்தை திறந்த பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, திருவாலங்காடு ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வெங்கடாபுரம் மகளிர் சுகாதார வளாகத்தை ஒரிரு நாளில் நேரில் ஆய்வு செய்து, போதுமான தண்ணீர் வசதி உள்ளதா என, ஆய்வு செய்த பின், மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும்' என்றார்.