/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அரசு பள்ளி மாணவியர் கழிப்பறை
/
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அரசு பள்ளி மாணவியர் கழிப்பறை
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அரசு பள்ளி மாணவியர் கழிப்பறை
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அரசு பள்ளி மாணவியர் கழிப்பறை
ADDED : டிச 15, 2024 12:12 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், கோரமங்கலம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 70க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதியின்றி சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக, கழிப்பறை இல்லாததால் மாணவியர் தினமும் அவதிப்பட்டனர்.
இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023 - 24ம் ஆண்டு திட்டத்தின் கீழ், 6.18 லட்சம் ரூபாய் மதிப்பில் மாணவியருக்கு புதிதாக கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் மாணவியர் கழிப்பறை திறந்து பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது.
இதனால் மாணவியர் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, திருத்தணி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோரமங்கலம் அரசு பள்ளியில் கழிப்பறை கட்டி முடித்து சில நாட்களே ஆனதால் ஒரிரு நாளில் நேரில் சென்று ஆய்வு செய்த பின் திறந்து பயன்பாட்டிற்கு விடப்படும்' என்றார்.