/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல அரசு பள்ளி மாணவர்கள் கோரிக்கை
/
பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல அரசு பள்ளி மாணவர்கள் கோரிக்கை
பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல அரசு பள்ளி மாணவர்கள் கோரிக்கை
பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல அரசு பள்ளி மாணவர்கள் கோரிக்கை
ADDED : ஜன 10, 2025 11:11 PM
திருமழிசை:வெள்ளவேடு அடுத்த, திருமழிசை பேரூராட்சியில் அமைந்துள்ளது சுந்தரம் அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில், திருமழிசை, மேல்மண்பேடு, கீழ்மணம்பேடு, நேமம் என சுற்றியுள்ள 10க்கும் கிராமங்களைச் சேர்ந்த மாணவ -- மாணவியர் 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 550க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள் அரசு மாநகர பேருந்தில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பூந்தமல்லியிலிருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் நின்று மாணவர்களை ஏற்றி, இறக்கி செல்கின்றன.
ஆனால், திருவள்ளூரிலிருந்து, பூந்தமல்லி, சென்னை நோக்கி செல்லும் மாநகர பேருந்துக்கள் மாணவர்களை ஏற்றி இறக்கி செல்வதில்லை.
இதனால் மாணவர்கள் பள்ளியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள கீழ்மணம்பேடு பேருந்து நிறத்தத்தில் இறங்கி பள்ளிக்கு நடந்து சென்று வருகின்றனர்.
இதனால் பள்ளிக்கு வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மாணவர்களின் நலன் கருதி, மாநகர பேருந்துகளை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.