/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாதுகாப்பு இல்லாத கழிப்பறை அரசு பள்ளி மாணவர்கள் அவதி
/
பாதுகாப்பு இல்லாத கழிப்பறை அரசு பள்ளி மாணவர்கள் அவதி
பாதுகாப்பு இல்லாத கழிப்பறை அரசு பள்ளி மாணவர்கள் அவதி
பாதுகாப்பு இல்லாத கழிப்பறை அரசு பள்ளி மாணவர்கள் அவதி
ADDED : அக் 30, 2025 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு: பள்ளி வளாகத்திற்கு வெளியே சாலையை ஒட்டி, பாதுகாப்பு இன்றி அமைந்துள்ள கழிப்பறையால், அரசு தொடக்க பள்ளி மாணவர்கள் அவதிப் பட்டு வருகின்றனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம் நொச்சிலியில், அத்திமாஞ்சேரி பேட்டை - கே.ஜி.கண்டிகை சாலையில் அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் கழிப்பறை வசதி இல்லை .
பள்ளி வளாகத்திற்கு வெளியே, 100 அடி துாரத்தில், சாலையோரம் உள்ள கழிப்பறையை மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கழிப்பறைக்கு சுற்றுச்சுவரும் இல்லை. கழிப்பறைக்கு செல்வதற்காக மாணவர்கள் பள்ளி வளாகத்தை தாண்டி வர வேண்டிய நிலை உள்ளதால், பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.