/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறைதீர் கூட்டம்: 374 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டம்: 374 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜூன் 02, 2025 11:21 PM

திருவள்ளூர்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பொதுமக்கள், நிலம் சம்பந்தமாக 118, பாதுகாப்பு திட்டம் 66, வேலைவாய்ப்பு வேண்டி 63, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் கோரி 35 மற்றும் இதரதுறை 92 என, மொத்தம் 374 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வாயிலாக, நீரில் மூழ்கி பலியான இருவரின் குடும்பத்தினருக்கு, தலா 1 லட்சம் ரூபாய் காசோலை வழங்கினார்.
மேலும், திருப்பாலைவனம் ஊராட்சி செஞ்சி அம்மன் நகரில், 'தாட்கோ' வாயிலாக புதிதாக கட்டப்பட்ட 43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சமுதாயக் கூடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, சுயஉதவிக் குழுவினருக்கு ஆணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் - வெங்கட்ராமன், தனித் துணை கலெக்டர் பாலமுருகன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.